ஜப்பானில் அதிர்ச்சி... அலறும் மக்கள்... 17 வருடங்கள் கழித்து மீண்டும் பரவும் குதிரைக் காய்ச்சல்!

 
குதிரை

ஜப்பான் நாட்டில்  குமாமோட்டோ மாகாணத்தில்  3 குதிரை வளர்ப்புப் பண்ணைகளில் உள்ள குதிரைகளுக்கு ஈகுவைன் இன்புளூவன்சா எனும் கொடிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இதனைத் தொடர்ந்து, அங்குள்ள குதிரைகளை தனிமைப்படுத்தி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

குதிரை

இந்த ஈகுவைன் இன்புளூவன்சா எனும் நோயானது மிகப் பெரியளவில் குழுக்களாக வளர்க்கப்படும் 1 முதல் 5 வயதுடைய குதிரைகள், கழுதைகள்  போன்ற விலங்குகளை பாதிக்கும் சுவாசக் கோளாறு நோய் எனக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட குதிரைகளின் சுவாசக் காற்றின் மூலமாகவும் மற்ற குதிரைகளுக்கு இந்த வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இந்த பாதிப்புக்கள் சுமார் 7-10 நாட்கள் வரை  தொடரும் எனவும் கூறப்படுகிறது. 2008ம் ஆண்டுக்கு பிறகு சுமார் 17 ஆண்டுகள் கழித்து ஜப்பானில் இந்தப் பாதிப்பானது தற்போது மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.

குதிரை

ஏற்கனவே 2007ம் ஆண்டு  சீனா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா  நாடுகளில் ஏற்பட்ட இந்தக் காய்ச்சலினால் லட்சக்கணக்கான குதிரைகள் பாதிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web