மதுரையில் அதிர்ச்சி... மன அழுத்தத்தால் காவலர் தற்கொலை!

 
போலீசார் கலவரம் காவல்துறை மறியல் போராட்டம்

தமிழகம் முழுவதுமே மன அழுத்தத்தாலும், அதிக பணி சுமைக் காரணமாகவும் காவலர்கள் தற்கொலைச் செய்துக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மதுரையில் மன அழுத்தத்தால் காவலர் ஒருவர் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன்(35). இவர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

பள்ளி மானவி தற்கொலை

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகப் பணிக்குச் செல்லாமல் மருத்துவ விடுப்பில் இருந்து வந்த கண்ணன், நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு  தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தற்கொலை

குடும்பப் பிரச்சினையால் கண்ணன் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், தாங்க முடியாமல் அவர்  தற்கொலை செய்திருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?