சிவகங்கையில் அதிர்ச்சி... ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் குளத்தில் மூழ்கி பலி!

சிவகங்கை மாவட்டத்தில், உலகம்பட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம்பட்டியில் நாகராஜன் - புவனேஸ்வரி தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யாழினி என்ற மீனாட்சி (10) என்ற மகள் உள்ளார். நாகராஜனின் தம்பி லட்சுமணனுக்கு மகேந்திரன் (7), சந்தோஷ் (5) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் பள்ளி விடுமுறை தினமான இன்று யாழினி, மகேந்திரன் (7), சந்தோஷ் (5) ஆகிய மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள படமஞ்சி என்ற கிராமத்தில் உள்ள செட்டி ஊரணியில் குளிக்க சென்றுள்ளார். குளிக்க சென்ற சிறுவர்கள் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பின்னர் சிறுவர்களின் உடல்கள் குளத்தின் நீரில் மிதந்துள்ளது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உலகம்பட்டி போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவம இடத்திற்கு விரைந்து வந்த உலகம்பட்டி போலீசாரும், தீயணைப்பு துறையினரும் பொதுமக்களுடன் இணைந்து மிதந்த சிறார்களின் உடல்களை மீட்டனர்.
பின்னர் கைப்பற்றி உடல்களை பிரேத பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் உலகம்பட்டி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளது அந்த கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க