தமிழகத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி... மீன்பிடிக்கும்போது தாத்தா, பேரன் பலி - குளத்தில் குளித்த தாய்-மகன் மரணம்!

 
பலி

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே காவிரியாற்றில் மீன்பிடிக்கச் சென்ற தாத்தா மற்றும் ஒரு பேரன் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகமும், அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது மகனைக் காப்பாற்ற முயன்ற தாயும், மற்றொரு மகனும் மூழ்கி உயிரிழந்த சோகமும் அடுத்தடுத்து அரங்கேறித் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கடுவெளி காவிரியாறு தடுப்பணைப் பகுதிக்கு, கடுவெளியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (70) தனது பேரன்கள் கிரிநாத் (14) மற்றும் விக்னேஷ் (10) ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது மூவரும் தடுமாறி ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கினர். இதில் விக்னேஷ் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், தாத்தா பாலகிருஷ்ணன் சடலமாக மீட்கப்பட்டார்.

கடல் நீர் மூழ்கி தண்ணீர்

காணாமல் போன கிரிநாத்தைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வருவதால் தேடுதல் பணியை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கடுவெளி மெயின் ரோட்டில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திய பின் மறியல் கைவிடப்பட்டது. தொடர்ந்து தேடிய நிலையில், நேற்று மதியம் 2.30 மணியளவில் சிறுவன் கிரிநாத்தின் உடலையும் தீயணைப்புப் படை வீரர்கள் மீட்டனர்.

கடல் நீர் மூழ்கி தண்ணீர் மரணம்

ராமநாதபுரம் நகரின் வீதிகளில் ஆட்டோ ரிக்‌ஷாக்களில் சாய்பாபா படம் வைத்து ஆந்திராவைச் சேர்ந்த சிலர் வலம் வந்தனர். இந்தக் குழுவில் ஆந்திர மாநிலம் கொழமுடை பகுதியைச் சேர்ந்த பென்சலம்மாள் (33) என்பவரும் இருந்தார். நேற்று ராமநாதபுரம் அருகே குயவன்குடி சாய்பாபா கோயில் பகுதியிலுள்ள ஒரு குளத்தில் பென்சலம்மாள் தனது இரு மகன்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது ஒரு மகன் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கியுள்ளான். உடனே அவனை காப்பாற்றத் தாய் பென்சலம்மாளும், மற்றொரு மகன் நவீனும் (12) சென்றுள்ளனர். இந்த விபத்தில் தாயும், மகன் நவீனும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மற்றொரு மகன் மீட்கப்பட்டான்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!