திரையுலகில் அதிர்ச்சி!! பிரபல நடிகை சிறுநீரக தொற்றால் மருத்துவமனையில் அனுமதி!!

 
ஷிவாங்கி ஜோஷி

சமீப காலமாக திரையுலகில் நடிகைகள் பலரும் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடிகை சமந்தா தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் தான் மீண்டுள்ளார். அவரை அடுத்து நடிகை மம்தா மோகன்தாஸ், தான் 'விட்டிலிகோ' என்ற ஆட்டோ இம்யூன் நோயால் பாதித்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இப்படி பல நடிகைகள் தாங்கள் சில நோய் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  பிரபல இந்தி சீரியல் நடிகை சிவாங்கி ஜோஷி, தான்  சிறுநீரக  பிரச்னையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.  அவருக்கு சக நடிகர்கள், நடிகைகள், ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

ஷிவாங்கி ஜோஷி

2013-ல் வெளியான ஜீ டிவியில் ஒளிபரப்பான ‘கெல்தி ஹை ஜிந்தகி ஆன்க் மிச்சோலி’ தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை சிவாங்கி ஜோஷி. அதனைத் தொடர்ந்து பெயின்டேஹா, லவ் பை சான்ஸ், பெகுசராய் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார்.2020-ம் ஆண்டில், கேன்ஸ் திரைப்பட விழாவில் எவர் ஓன் ஸ்கை திரைப்படத்துடன் அறிமுகமாக இருந்தார் நடிகை சிவாங்கி, ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக, படம் பின்னர் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

ஷிவாங்கி ஜோஷி

இந்த நிலையில், சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகை சிவாங்கி ஜோஷி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பாலிவுட் நடிகை சிவாங்கி ஜோஷி, மருத்துவமனையில் இருந்து கொண்டே வெளியிட்டுள்ள பதிவில், ‘அனைவருக்கும் வணக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன் எனக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டது. தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த 2 நாட்களாக கடினமான சூழலில் இருந்து மீண்டு வருகிறேன்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web