அதிகாலையில் அதிர்ச்சி... ஜே.சி.பி.யை இயக்கி 25 வாகனங்களை சுக்குநூறாய் நொறுக்கிய சிறுவன்!

இன்று அதிகாலையில் மதுரை மாவட்டம் செல்லூரில் ஜேசிபி இயந்திரத்தை இயக்கிய சிறுவன் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்களை என சுமார் 25 வாகனங்களை அடுத்தடுத்து சுக்குநூறாய் நொறுக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை செல்லூர் பகுதியில் 17 வயதுடைய சிறுவன் ஒருவன் இன்று அதிகாலை 3 மணியளவில் ஜேசிபி இயந்திரத்தை இயக்கியுள்ளார். செல்லூர் 50 அடி சாலையில் ஜேசிபி இயந்திரத்தை வேகமாக இயக்கியதில், திடீரென சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை அடுத்தடுத்து இடித்து சுக்குநூறாய் நொறுக்கியது.
அதன் பின்னரும் நிற்காத ஜேசிபி, மேலும் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் உட்பட சுமார் 25 வாகனங்களை சேதப்படுத்தியது. அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அலறியடித்தப்படி விலகினார்கள்.
அதனைத் தொடர்ந்து ஜேசிபியை ஓட்டி வந்த சிறுவனைப் பிடித்த பொதுமக்கள் இது குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து, சிறுவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஜேசிபி இயந்திரத்தை இயக்கிய சிறுவன் போதையில் இருந்ததாக சிறுவனைப் பிடித்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!