அதிகாலையில் அதிர்ச்சி... துருக்கியில் நிலநடுக்கம்... தப்பிக்க ஜன்னல் வழியாக குதித்ததில் 7 பேர் படுகாயம் !

 
அதிகாலையில் அதிர்ச்சி... துருக்கியில் நிலநடுக்கம்... தப்பிக்க ஜன்னல் வழியாக குதித்ததில்  7 பேர் படுகாயம் !
 

துருக்கி  நாட்டின் கடற்கரை நகரமான மர்மரிசில் இன்று அதிகாலை 2.15 மணிக்கு  நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மத்திய தரைக்கடலை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

 துருக்கியில் நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கத்தால் மர்மரிஸ் நகரில் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், இரவில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அச்சத்துடன் எழுந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். சிலர் நிலநடுக்கத்தில் இருந்து தப்பிக்க வீடுகளில் இருந்து ஜன்னல் வழியாக வெளியே குதித்தனர். இந்த சம்பவத்தில் 7 பேர் காயமடைந்தனர். 

 துருக்கியில் நிலநடுக்கம்

இதையடுத்து காயமடைந்த 7 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என  அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.  2023ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 53000 பேர்  உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது