உ.பி.யில் அதிர்ச்சி... பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து, வீடியோவைக் காட்டி மிரட்டிய இளைஞர்கள்!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில், 13 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல், அந்தக் காட்சிகளை வீடியோ எடுத்து ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிப் பணம் கேட்டு மிரட்டிய இரண்டு இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமியை அதேப் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சில நாட்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அந்தப் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து ஆன்லைனில் விட்டுவிடுவதாகவும் சிறுமியை மிரட்டியுள்ளனர். வீடியோவை ஆன்லைனில் வெளியிடாமல் இருக்க, சிறுமியின் குடும்பத்தினரிடம் ரூ. 5 லட்சம் தருமாறு மிரட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்துச் சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பாலியல் வன்கொடுமை செய்த வைபவ் (19) மற்றும் விஷால் (21) ஆகிய இரண்டு இளைஞர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
