விருதுநகரில் அதிர்ச்சி... பள்ளிவாசலில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்!
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த அதிர்ச்சியாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிவாசல் ஒன்றில் இளம்பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு அத்துமீற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வீரசோழன் பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ்(25). நரிக்குடி ஜும்மா பள்ளிவாசலில் அஷ்ரத் ஆக பணிபுரிந்து வரும் இவரை, அப்பகுதி மக்கள் குழந்தைகளுக்கு ஓதி வைக்கும் பாரம்பரியத்தாலும், உடல்நலக் குறைபாடுகளுக்கு ‘மந்திரம்’ செய்வதாக நம்பிக்கையாலும், அடிக்கடி அவரை அணுகி வந்தனர். இது போல நீண்டநாள் உடல்நலப் பிரச்சினையில் தவித்த வந்த 22 வயதுடைய இளம் பெண் ஒருவரையும் அக்கம் பக்கத்தினர் பள்ளிவாசலுக்கு செல்ல அறிவுறுத்தினர்.
அதன்படி வந்த அந்த பெண்ணுக்கு ஓதி அனுப்பிய அஜீஸ், மறுநாள் தனியாக வரும்படி கூறியதாக கூறப்படுகிறது. அடுத்த நாள் வந்த பெண்ணை ‘தனியாக மந்திரம் செய்ய வேண்டும்’ என்ற பெயரில் பள்ளிவாசலின் அறைக்குள் அழைத்துச் சென்றார். சில நிமிடங்கள் ஓதி நடித்து பின்னர் பாலியல் ரீதியாக அணுக முயன்றதாக தகவல். பெண் திடீரென கத்தி கூச்சலிடத் தொடங்கியதும், மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் இருந்த வழுக்கைக் கத்தியை எடுத்து மிரட்டியுள்ளார். கூச்சல் அடங்கவில்லை என்பதால் கோபம் கொண்ட அஜீஸ், பெண்ணின் கழுத்து மற்றும் கைகளில் சரமாரியாக தாக்கியதாக போலீஸ் விசாரணையில் தகவல்கள் வெளிவந்துள்ளன.

காயத்தால் வலித்த பெண் வெளியே வந்து ஓலமிட்டதை கேட்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தப்பிச் செல்ல முயன்ற அப்துல் அஜீஸை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து நரிக்குடி போலீசுக்கு ஒப்படைத்தனர். தற்போது காயமுற்ற பெண் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளிவாசலில் ‘மந்திரம்’ பெயரில் நடந்த இந்த கொடூரச் செயல் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
