அதிர்ச்சி... பள்ளி மாணவர்களின் பைகளில் கத்தி, ஆணுறைகள், சீட்டுக்கட்டு!

 
ஆணுறை கத்தி ஸ்கூல் பேக்

மகாராஷ்டிரா மாநிலத்தில்  பள்ளி ஒன்றில் மாணவர்களின் பைகள் திடீர் சோதனை நடத்தப்பட்டதில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் கத்தி , சைக்கிள், செயின், சீட்டு கட்டு, ஆணுறைகள் கண்டெடுக்கப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

அப்போது 8 - 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பைகளில் ஆணுறைகள், கூர்மையான கத்திகள், சீட்டு கட்டு, சைக்கிள் செயின் மற்றும் பிற தடை செய்யப்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதனை கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இதுகுறித்து பள்ளியின் முதல்வரிடத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

கத்தி

இதனால் அப்பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் இடையே இந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து, இதுபோன்ற பொருகளை எடுத்த வருவதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மாணவர்கள் இதை கொண்டுவந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து தெரியவில்லை.

ஆசிரியரை பழிவாங்க கழிப்பறையில் வெடிகுண்டு வைத்த பள்ளி மாணவர்கள்

இதுகுறித்து பள்ளியின் முதல்வர்  "திடீர் சோதனையின் போது, ​​இரும்புப் பொருட்கள், கத்திகள் மற்றும் சங்கிலிகள் ஆகியவற்றைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தோம். இந்த வகையான  பொருட்கள் பொதுவாக குற்றச் செயல்களுடன் தொடர்புடையவை என்பதை மாணவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களிடத்திலும் நாங்கள் தெரிவித்தோம். இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் நாங்கள் விளக்கமாக கூறியுள்ளோம்," எனத் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web