அதிர்ச்சி... இலங்கையில் மீண்டும் மண்சரிவு... 20 குழந்தைகள் உட்பட 120 பேர் மாயம்!

 
இலங்கை நிலச்சரிவு

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயலின் தொடர் தாக்கத்தால், இலங்கையில் கனமழை நீடிப்பதோடு, பல பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், கேகாலை மாவட்டத்தில் மீண்டும் ஏற்பட்ட மண்சரிவில், 20 குழந்தைகள் உட்பட 120 பேர் சிக்கி மாயமாகியுள்ளனர்.

இலங்கையில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி முதல் பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 34 பேரைக் காணவில்லை என்று இலங்கைப் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை கனமழை

இந்தக் கனமழையால் சுமார் 63 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2.19 லட்சம் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 670-ஐ தாண்டியுள்ளது. மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், நிவாரண உதவிகள் தடையில்லாமல் கிடைக்கவும் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது 'டிட்வா' புயல் வடக்கு இலங்கைப் பகுதியில் மையம் கொண்டுள்ள நிலையில், புயலின் எதிரொலியாகக் கேகாலை மாவட்டத்தில் மீண்டும் ஒருமுறை பெரும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் சுமார் 20 குழந்தைகள் உட்பட 120 பேர் சிக்கி, காணாமல் போயுள்ளனர்.

புயல்

இதே போன்று, அனுராதபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட புத்த பிக்குகளும் சிக்கித் தவித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணியிலும், சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் நடவடிக்கைகளிலும் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவ, அண்டை நாடான இந்தியா உடனடியாக முன்வந்தது. 'ஆபரேஷன் சாகர்பந்து' என்ற பெயரில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது.

ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ். உதயகிரி ஆகிய கப்பல்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் கொழும்பு நகரில் வழங்கப்பட்டன. மேலும், இந்திய விமானப் படையின் சி-130 ஜே விமானம் மூலம் கூடாரங்கள், போர்வைகள், சுகாதாரப் பொருட்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 12 டன் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!