அதிர்ச்சி... வாதாட மறுத்த வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி!

தனது சார்பாக வாதாட மறுத்த வழக்கறிஞரை குற்றவாளி அரிவாளால் வெட்டிய சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியுடவுன் பகுதியில் வசித்து வருபவர் கண்ணதாசன். இவர் கடந்த 8 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.வாணியம்பாடி கோணாமேடு பகுதியை சேர்ந்த கானா முருகன்.இவர் கானா பாடல்களை பாடி வரும் நிலையில், இவர் மதுபானம் விற்பனை, வழிப்பறி உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். இந்நிலையில், கானா முருகன் வழக்கு தொடர்பாக கண்ணாதாசன் சில ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வாதாடி வந்த நிலையில், கானாமுருகன் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால், அவர் சரித்திர பதிவேடு குற்றவாளியான நிலையில், கானா முருகனின் வழக்கில் வாதாட அவரது வழக்கறிஞர் கண்ணதாசன மறுத்து விட்டார்.
இந்நிலையில் கானா முருகன், நியுடவுன் பகுதியில் உள்ள வழக்கறிஞர் கண்ணதாசனின் அலுவலகத்திற்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கானா முருகன் தான் வைத்திருந்த அரிவாளால், வழக்கறிஞர் கண்ணதாசனின் கை மற்றும் உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெட்டி விட்டு, கண்ணதாசனின் செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டார்.
உடனடியாக இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள், வழக்கறிஞர் கண்ணதாசனை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து வழக்கறிஞர் கண்ணதாசனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய கானா முருகனை வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் விண்ணமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கானாமுருகனை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!