அதிர்ச்சி... பெண்களைப் போல சேலை அணிந்து 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.3 லட்சம் மோசடி!

 
பெண்களைப் போல சேலை அணிந்து 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.3 லட்சம் மோசடி
கர்​நாடக மாநிலம் யாதகிரி மாவட்​டத்​தில் பெண்களைப் போல சேலை அணிந்துக் கொண்டு வேடமிட்டு, 100 நாள் வேலைவாய்ப்பு திட்​டத்தில், ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்பலமானது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த மார்ச் மாதத்​தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறு​தித் திட்​டமான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்​தில் உள்ள குறை​களை தீர்க்க  மையங்​கள் தொடங்​கப்​பட்​டன. இந்த குறை தீர்க்கும் மையங்களில், சில பஞ்​சா​யத்​துகளில் ஊதி​யத்​தில் மோசடி அரங்​கேறி வருவ​தாக பலரும் புகைப்பட ஆதா​ரங்​களை அதி​காரி​களிடம் அளித்திருந்​தனர். அந்த புகைப்​படங்​களைப் பார்த்த அதி​காரி​கள் அதிர்ச்சி அடைந்​தனர்.

மோசடி

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில், ஏரி​யில் வேலை செய்​யும்​போது பெண்​களை போல சில ஆண்​கள் சேலை அணிந்து தலை​யில் முக்​காடு போட்டுக் கொண்டு புகைப்​படம் எடுத்​துள்​ளனர். இந்த புகைப்​படங்​களை 100 வேலை திட்​டத்​துக்​கான NMMS எனப்படும் தேசிய மொபைல் கண்​காணிப்பு சேவை​யில் பதிவேற்​றம் செய்​து, ஊதி​யம் பெற்று வந்​துள்ளதும் தெரிய வந்துள்ளது. 

இப்படி சுமார் ரூ.3 லட்​சம் வரை மோசடி செய்​தது அம்​பல​மான நிலையில் இது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web