அதிர்ச்சி... 340க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு... சிரியாவில் அரசுப் படைகள் நடத்திய கொடூர தாக்குதல்!

 
சிரியா

சிரியாவில் முன்னாள் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும், அரசுக்கு ஆதரவான படைகளுக்கும் இடையே  மார்ச் 6ம் தேதியிலிருந்து  மோதல் வலுப்பெற்றுள்ளது.

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பின் தலைமையிலான கிளர்ச்சிக் குழுக்களால் அசாத்தின் அரசாங்கம்  டிசம்பர் மாத தொடக்கத்தில் கவிழ்க்கப்பட்டது. மண்ணிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

சிரியா

இந்நிலையில் மார்ச் 6 ம் தேதி முதல் மோதல் தீவிரமடைந்து இருப்பதாக  சிரியா செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது, சிரியாவின் கடலோர மாகாணமான லடாகியாவில் உள்ள ஜப்லே நகரில் நேற்று வன்முறை வெடித்தது. அங்குள்ள  3 கிராமங்களில் ஆயுதமேந்திய ஆசாத் ஆதரவு குழுவினரை அரசு ஆதரவு படைகள் வெளியேற்ற முயற்சித்தனர்.  அப்போது நடந்த மோதலில் ஒரே நாளில் 70 பேர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

அத்துடன், சிரியா அரசு ஆதரவு படையினரும் அதனுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களும் கடந்த இரண்டு நாட்களில் 340க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொல்லப்பட்டுள்ளதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

சிரியா

இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் அந்நாட்டில் உள்ள அலவைட் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் என்று சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பக அதிகாரி ராமி அப்துல் ரஹ்மான் நேற்று (சனிக்கிழமை) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web