அதிர்ச்சி... தமிழ் தகுதித்தாள் தேர்வில் 85,000க்கும் மேற்பட்டோர் தோல்வி... முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு!

 
ஆசிரியர் தேர்வு வாரியம். ஆசிரியர் தேர்வு வாரியம்.

தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) மற்றும் கணினி பயிற்றுநர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 1,996 இடங்களை நிரப்புவதற்காக, கடந்த மாதம் (அக்டோபர்) நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும், கட்டாயத் தமிழ் மொழித் தகுதித்தாளில் சுமார் 85,000க்கும் மேற்பட்டோர் தோல்வியடைந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board - TRB) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முதுகலை ஆசிரியர் தேர்வுகளுக்கான இறுதி விடைக்குறிப்பு மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்களுக்கு 1:1.25 என்ற விகிதாசார அடிப்படையில், அதாவது ஒவ்வொரு காலியிடத்திற்கும் 1.25 பேர் என்ற விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் பாடவாரியாகத் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.trb.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் ஆசிரியை பேராசிரியர்

சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தகுதி பெற்ற தேர்வர்கள் அனைவரும், அதற்கான அழைப்புக் கடிதம் மற்றும் இதர படிவங்களைத் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கடிதங்கள் தபால் மூலம் தேர்வர்களுக்கு அனுப்பப்படாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவாக அறிவித்திருக்கிறது.

இந்தத் தேர்வில் இரண்டு பகுதிகள் உண்டு: முக்கியத் தேர்வு: சம்பந்தப்பட்ட பாடம், கல்வி உளவியல் மற்றும் பொது அறிவு ஆகியவற்றில் இருந்து 150 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு 150 மதிப்பெண்கள். அதே போன்று கட்டாயத் தமிழ்த் தகுதித்தாள் தேர்வில் 30 கேள்விகள் இடம்பெறும். இதற்கு 50 மதிப்பெண்கள் ஒதுக்கப்படும்.

டெட் தேர்வு ஆசிரியர்

விதிமுறைப்படி, தேர்வர்களின் முக்கியப் பாட விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட வேண்டுமென்றால், அவர்கள் கட்டாயத் தமிழ்த் தகுதித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் (50க்கு 20 மதிப்பெண்கள்) எடுத்திருக்க வேண்டும்.

இந்தத் தேர்வில் மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 412 பேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில், 40 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய கட்டாயத் தமிழ்த் தகுதித்தாள் தேர்வில், சுமார் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இது, தேர்வு எழுதிய மொத்த தேர்வர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர், அரசுப் பணிக்கு இன்றியமையாத தமிழ்த் தகுதித் தேர்வில் தோல்வியடைந்துள்ளதைக் காட்டுகிறது. இந்தப் பெருவாரியான தோல்வி, தேர்வுக்குத் தயாரானவர்கள் மத்தியிலும், கல்வித் துறையிலும் பேசுபொருளாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!