அதிர்ச்சி... ரூ.1,800 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கடலில் வீசப்பட்ட நிலையில் பறிமுதல்!

குஜராத் மாநிலத்தில் அரபிக் கடலில் கொட்டப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய கடல் எல்லைக் கோடு அருகே குஜராத் மாநிலத்தில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல்கள் வந்ததையடுத்து ஏப்ரல் 12 மற்றும் 13ம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் இந்திய கடலோர காவல்படை இணைந்து தீவிர சோதனை மேற்கொண்டன.
அப்போது அருகில் வந்த கடலோர காவல்படை கப்பலைக் கண்டதும் படகில் இருந்த போதைப்பொருள்களை கடலில் வீசிவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, 300 கிலோ போதைப்பொருள்களை இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்தது.
அவற்றின் மதிப்பு ரூ.1,800 கோடி இருக்கும் கணக்கிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருள் மெத்தம்பேட்டமைன் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் விசாரணைக்காக குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!