பொங்கலன்று அதிர்ச்சி... தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியது... சவரன் ரூ.1,06,400-க்கு விற்பனை! வெள்ளி விலையும் விண்ணைத் தொட்டது!
தங்கத்தின் விலை எப்போது குறையும் என்று ஏங்கியவர்களுக்குப் பொங்கல் திருநாளில் இடியாய் இறங்கியுள்ளது இன்றைய விலை நிலவரம். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம் (ஜனவரி 15, 2026): 22 கேரட் ஆபரணத் தங்கம் (சவரன்): நேற்று ரூ.1,06,240-க்கு விற்பனையான தங்கம், இன்று மேலும் ரூ.80 உயர்ந்து ரூ.1,06,320-க்கு (அல்லது ஒரு சில இடங்களில் ரூ.1,06,400) விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.13,290-க்கு விற்பனையாகிறது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏறுமுகமாகவே உள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாகத் தங்கம் விலை குறையாமல் உயர்ந்து கொண்டே செல்கிறது.

தங்கத்திற்கு இணையாக வெள்ளி விலையும் வரலாறு காணாத உயர்வைச் சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.3 உயர்ந்து ரூ.310-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ (பார் வெள்ளி) கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து ரூ.3,10,000-க்கு விற்பனையாகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
