பள்ளிகள் திறக்கும் நாளில் அதிர்ச்சி... இன்று முதல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு!

 
ஆசிரியர்கள் போராட்டம்

சென்னையில் கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள், அரசுத் தரப்பில் சாதகமான முடிவு வராததால், இன்று முதல் தங்களது போராட்டத்தை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் நேற்று ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் 'மனித சங்கிலி' போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதி எண் 311-ஐ (ஊதிய முரண்பாடு களைதல்) நிறைவேற்றக் கோரி பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களைப் போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். போராட்டம் குறித்து இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ "2009-ம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட 20,000 ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட ஊதிய அநீதி இது. சம வேலைக்குச் சம ஊதியம் என்பது எங்களின் நியாயமான கோரிக்கை. 10 நாட்களாக வீதியில் போராடும் ஆசிரியர்களை அரசு கண்டுகொள்ளாதது வேதனை அளிக்கிறது. முதல்வர் அல்லது துணை முதல்வர் உடனடியாகத் தலையிட வேண்டும்."

ஆசிரியர்கள் போராட்டம்

அவர் மேலும் கூறுகையில், "அரசு எங்களை அழைத்து முறையாகப் பேச்சுவார்த்தை நடத்தி, ஊதிய முரண்பாட்டைக் களைந்தால் மட்டுமே பள்ளிக்குத் திரும்புவோம். அதுவரை இன்று முதல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் தீவிரமாகத் தொடரும்" என எச்சரித்துள்ளார்.

இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 20,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபடுவதால், அரசுப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வி வகுப்புகள் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. மாணவர்களின் நலன் கருதி அரசு இன்று ஏதேனும் முக்கிய அறிவிப்பை வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!