அமாவாசை நாளில் அதிர்ச்சி... புதிய உச்சம் தொட்ட தங்கம்...!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பங்குச்சந்தை வீழ்ச்சி மற்றும் போர் சூழல்களால், தங்கத்தை பலரும் பாதுகாப்பான முதலீடாக கருதி அதில் முதலீடு செய்து வருகின்றனர். தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. மார்ச் 20ம் தேதி தங்கத்தின் விலை புதிய உச்சம் தொட்டு வருகிறது. மார்ச் 21ம் தேதியில் இருந்து குறைந்து வந்த தங்கம் விலை, மீண்டும் அதிகரித்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8235-க்கும், ஒரு சவரன் ரூ.65880-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.105-ம், சவரனுக்கு ரூ.840-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8340க்கும், ஒரு சவரன் ரூ.66720-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது தங்கத்தின் விலை இதன் மூலம் மீண்டும் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து காணப்படுவதால், தங்கம் விலை மீண்டும் எகிறியுள்ளது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.113-க்கும், ஒரு கிலோ ரூ.113000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!