சின்னத்திரையில் அதிர்ச்சி... ’லொள்ளு சபா’ காமெடி நடிகர் ஆண்டனி காலமானார்!

தமிழ் சின்னத்திரையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் காமெடி நடிகர் ஆண்டனி. இவர் "லொள்ளு சபா" நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். தனது தனித்துவமான நகைச்சுவை பாணியைக் கொண்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
'லொள்ளு சபா' நிகழ்ச்சியில் சந்தானத்துடன் பல எபிசோடுகளில் ஒன்றாக நடித்துள்ளார் ஆண்டனி. சந்தானம் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்ததும், 'தம்பிக் கோட்டை' உட்பட சில படங்களில் சந்தானத்தின் நண்பராக காமெடி கதாபாத்திரங்களில் நடித்தவர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்டனி, அதற்காக தொடர்ந்து சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். அவருக்கு சந்தானம் மற்றும் நடிகர் சேஷு உட்பட சிலர் உதவியிருந்தனர். இந்நிலையில் உடல்நிலை மோசமாகி இன்று காலை சிகிச்சை பலனின்றி ஆண்டனி காலமானார். அவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள், சக நடிகர் நடிகைகள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!