போதைக்கு அடிமையாகும் இளம்பெண்கள்... எந்தெந்த மாநிலங்களில் பெண்கள் அதிகம் மது அருந்துகின்றனர்?!

 
மது

நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் இளம்பெண்கள் மது போதைக்கு அடிமையாகி வரும் போக்கு நிலவி வருகிறது. வளர்ந்து வரும்ம் மேற்கத்தைய கலாச்சாரம், ஐடி வேலை, கைநிறைய சம்பளம், ஹாஸ்டல் மற்றும் தனிமையான வாழ்க்கை, வெளியூரில் பணி, நட்பு வட்டம், ஜாலி, கேளிக்கை, சோர்வைப் போக்க பொழுதுபோக்கு என்று பல காரணங்கள் கூறப்பட்டாலும் சமீப காலங்களாக மதுவுக்கு பெண்கள் அடிமையாகி வரும் போக்கு அதிகரித்திருக்கிறது.

சமூக விதிமுறைகளை மீறி அனைத்து துறைகளிலும் ஆண்களுடன் பெண்கள் போட்டியிட்டு சாதனை படைத்துள்ளனர். பணிகள்  மற்றும் வணிகத்தில் அவர்களுடன் போட்டியிட்டு சிறந்து விளங்கும் பெண்கள், மது அருந்துவதிலும் ஆண்களுடன் போட்டியிடுகின்றனர். தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு  2019-20 இன் தரவுகளின் அடிப்படையில், பெண்கள் அதிகம் மது அருந்தும் ஏழு மாநிலங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.   

பெண்கள் மது சரக்கு பார்

மது அருந்துவது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது. ஏனெனில் குஜராத் மாநிலத்தில் மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் சில மாநிலங்களில், மற்ற மாநிலங்களை விட அதிகமான பெண்கள் மதுவுக்கு அடிமையாகி வருவதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது .இதன்படி   எந்தெந்த மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளன என்பதைப் பார்ப்போம்.

பெண்கள் அதிக அளவில் மது அருந்தும் மாநிலங்களின் பட்டியலில் அருணாச்சலப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இங்கு, 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் 26% பேர் மது அருந்துகிறார்கள்.

சிக்கிமில் 16.2% பெண்கள் மது அருந்துகிறார்கள். இந்நிலையில், வீட்டிலேயே மதுபானம் தயாரிக்கப்பட்டு குடிக்கப்படுவதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  அந்த வகையில் அஸ்ஸாமில் 7.3% பெண்கள் மது அருந்துகின்றனர். முதல் இரண்டு வடகிழக்கு மாநிலங்களைப் போலவே, அஸ்ஸாமில் உள்ள பழங்குடி சமூகங்களும் மது உற்பத்தி மற்றும் நுகர்வை ஒரு பாரம்பரியமாகக் கருதுகின்றன. தென்னிந்திய மாநிலத்தில் 6.7% பெண்கள் மது அருந்துகின்றனர்.   இந்த மாநிலத்தில் கிராமப்புற பெண்கள் நகர்ப்புற பெண்களை விட அதிகமாக மது அருந்துகிறார்கள்.

மது
ஜார்க்கண்டில், 6.1% பெண்கள் மது அருந்துகிறார்கள். வேலைவாய்ப்புகள் இல்லாததால், இங்குள்ள பலர், முக்கியமாக பழங்குடி குழுக்களைச் சேர்ந்தவர்கள், மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்தப் பட்டியலில் உள்ள ஒரே யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில், 5% பெண்கள் மது அருந்துகிறார்கள். சத்தீஸ்கரில் சுமார் 5% பெண்கள் மது அருந்துகிறார்கள். மன அழுத்தம், பெண்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாதது மற்றும் பிற காரணங்களால் அதிகமான பெண்கள் மதுவுக்கு அடிமையாகி வருவதாக கூறப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?