அதிர்ச்சி... ஓடும் ரயிலில் பயணிகளை தாக்கி கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள்!

 
ரயில்
ஓடும் ரயிலில் பயணிகளைத் தாக்கி கொள்ளையடித்து பாதியில் சூட்கேசுடன் இறங்கிச் சென்ற கொள்ளையர்களின் செயல் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் பீகார் மாநிலத்தில் பாட்னாவுக்கும் ஷெரீப்பிற்கும் இடையில்  உள்ளூர் டான்பூர்-ராஜ்கிர் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பயணிகளை தாக்கி, அவர்களிடமிருந்த சூட்கேஸ்களை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் வேனா மற்றும் ரஹுய் நிலையங்களுக்கு இடையில் இரவு நேரத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. ரயிலில் ஏறிய 3 மர்ம நபர்கள், பயணிகளை தாக்கி, அவர்களது உடைமைகளைக் கொள்ளையடித்தனர். அந்த ரயில்  ரஹுய் ஹால்ட்டை அடைந்ததும் குற்றவாளிகள் இரு சூட்கேஸ்களுடன் ரயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.  

ரயில்

இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரோஹித் குமார், ரிங்கு தேவி மற்றும் அன்ஷு குமார் ஆகிய 3 பயணிகள் படுகாயமடைந்தனர். உடனடியாக இது குறித்து அறிந்த  காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை  மாடல் மருத்துவமனைக்கு அழைத்து  சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ரோஹித் குமார்  குஜராத்திலிருந்து பாட்னாவிற்கு வந்த பின்னர், பீகார் ஷெரீப்பிற்கு உள்ளூர் ரயிலில் பயணம் செய்தபோது சில மர்ம நபர்கள் வேனாவில் ரயிலில் ஏறி தகராறில் ஈடுபட தொடங்கினர் .  பின்னர் பயணிகளை தாக்கி, அவர்களின் சாமான்களை பிடுங்கிச் சென்றனர் எனவும் கூறினார்.

ரயில்

ரயில்வே காவல் நிலைய அதிகாரி இது குறித்து   தொடக்க விசாரணையில் பயணிகளிடையே இருக்கை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.  தற்போதைய நிலையில் அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினர்.  

மேலும், பாட்னாவில் இருந்து புறப்படும் போது ரயில்கள் நிரம்பியிருப்பதும், பீகார் ஷெரீப்பை அடையும் நேரத்தில் வெறிச்சோடி இருப்பதும், இத்தகைய குற்றச்செயல்களுக்குத் தூண்டுதலாக உள்ளதாகவும் கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web