அதிர்ச்சி... திருவிழாக்களில் தொடர் திருட்டு... இளம்பெண் கைது.. 28 சவரன் தங்க நகைகள் மீட்பு!

 
திருட்டு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோயில் திருவிழாக்களில் தொடர்ந்து பெண்களிடம் சங்கிலி பறித்து வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து  28 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

கோயில் கோவில் திருவிழா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடி, பிள்ளையார் பட்டி, கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கோயில் திருவிழாக்களில் பெண்களிடம் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து குன்றக்குடி போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டோரை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் சார்பு-ஆய்வாளர் பழனிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

நகைகள் திருட்டு பெண் மந்திரவாதி

இதில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த முத்தழகு (36), என்பது தெரிய வந்தது. முத்தழகை தனிப்படை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 28 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web