அதிர்ச்சி... கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டியதில் கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து ஸ்டேஷன் மாஸ்டர் பலி.!

 
கூகுள் மேப்
 

 

டெல்லியின் மண்டாவலியில் வசித்து வருபவர்  ஸ்டேஷன் மாஸ்டர் பாரத் பாட்டி. இவர் ஒரு திருமண விழாவிற்குச் சென்று கொண்டிருந்தார். கூகுள் மேப் உதவியுடன் சாலையில் சென்று கொண்டிருந்த போது கேந்திரிய விஹார்-2 சொசைட்டிக்கு முன்னால் தனது காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது திடீரென   அவரது கார் திடீரென வடிகாலில் விழுந்தது.

கூகுள் மேப்
தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஸ்டேஷன் மாஸ்டரை வெளியே எடுக்க போலீசார் கடுமையாக முயற்சி செய்தும் முடியவில்லை.   நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அவரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.  அவரிடம் இருந்த அடையாள அட்டையை வைத்து ஸ்டேஷன் மாஸ்டரை அடையாளம் கண்ட போலீசார், பின்னர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.  சாலை மூடப்பட்டது குறித்து சாலை பயனர்களுக்கு எந்த அறிவிப்பு பலகையும் வைக்காததால் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாக அப்பகுதிவாசிகள்  தெரிவித்தனர்.

கூகுள் மேப்

காவல்துறையினரின் கூற்றுப்படி, கூகிள் மேப்ஸ் ஓட்டுநர்களை பல  சமயம் தவறாக வழிநடத்துகிறது, இது அவர்களை பாதுகாப்பற்ற பாதையில் அழைத்துச் சென்றது. நான்கு பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் சில பெயர் குறிப்பிடப்படாத நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டேடகஞ்ச் காவல் நிலைய எஸ்.எச்.ஓ கௌரவ் பிஷ்னோய் உறுதிப்படுத்தினார். கூகிள் மேப்ஸின் பிராந்திய அதிகாரியும் விசாரணையில் உள்ளதாக கூறப்படுகிறது.

 

 

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web