அதிர்ச்சி... சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு... 7 பெட்டிகளின் கண்ணாடி உடைப்பு!

 
ரயில் கண்ணாடி உடைப்பு

நேற்று இரவு, மைசூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியது பயணிகளை அதிர செய்தது. இந்த கல்வீச்சில், ரயிலின் 7 பெட்டிகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

சென்னை - மைசூர் இடையே காவேரி எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் தொடங்கி, திருவள்ளூர், ஜோலார்பேட்டை, பெங்களூரு வழியாக மைசூர் சென்றடையும். சென்னையிலிருந்து இரவு 9 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் காலை 6 மணிக்கு மைசூரைச் சென்றடையும். அதேபோல், மைசூரில் இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு காலை 7 மணிக்கு சென்னை வந்தடையும்.

காவிரி எக்ஸ்பிரஸ்

இந்நிலையில், நேற்று இரவு மைசூருவில் புறப்பட்ட காவேரி எக்ஸ்பிரஸ் அதிரவிரைவு ரயில் இன்று காலை 7 மணிக்குச் சென்னை சென்ட்ரலை வந்தடைந்தது. இதையடுத்து, அந்த ரயில் கும்மிடிப்பூண்டியில் உள்ள டிப்போவுக்கு சென்றது. அப்போது, திருவொற்றியூர் அருகே சென்ற போது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காவிரி எக்ஸ்பிரஸ்

இதில் 7 பெட்டிகளின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. பெட்டிகள் காலியாக இருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரயில் நிலையம் வந்ததும், அதிகாரிகள், ரயிலை ஆய்வு செய்தனர். ரயில் பெட்டிகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியது தொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web