அதிர்ச்சி... டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம் கொடுத்த இளம்பெண்!

 
டிஸ்யூ பேப்பர்
சிங்கப்பூரில் உள்ள பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இளம்பெண் ஒருவர், டிஷ்யூ பேப்பரில் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து சிங்கப்பூர் நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த கடிதத்தை, சிங்கப்பூரைச் சேர்ந்த ஆஞ்சிலா யோஹ் என்ற பெண் தொழிலதிபர் தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு, “நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த ராஜினாமா கடிதத்தில், "நான் தேவைப்படும் போது பயன்படுத்தப்படும் கழிப்பறைக் காகிதத்தைப் போல உணர்ந்தேன். எந்தவொரு இரண்டாம்பட்ச சிந்தனையைக் கூட இல்லாமல் தூக்கி எறியப்பட்டேன்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

இந்த நிறுவனம் என்னை எவ்வாறு நடத்தியது என்பதற்கான அடையாளமாக தான், இந்த வகையான காகிதத்தை எனது ராஜினாமா கடிதத்தை எழுத தேர்ந்தெடுத்துள்ளேன்" என்று எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பான பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வரும்m நிலையில், பலரும் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் பகிர்ந்து வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web