ஷாக்.. நிவாரணப் பொருட்கள் ஏற்றி சென்ற லாரிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் பயங்கரவாதிகள்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. பின்னர், அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் எட்டப்பட்டது. வன்முறையால் பாதிக்கப்பட்ட குர்ரம் மாவட்டத்திற்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரிகள் தால் பகுதியிலிருந்து குர்ரம் நோக்கி அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தன. அந்த நேரத்தில், ஓச்சிட் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் லாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ஒரு லாரி ஓட்டுநர் கொல்லப்பட்டார். ஒரு போலீஸ்காரர் உட்பட 15 பேர் காயமடைந்தனர்.
இதேபோல், பாகன், மண்டோரி, டாட் கமர் மற்றும் சார் கேல் உள்ளிட்ட பல இடங்களில் தாக்குதல்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து, நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரிகள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன. கைபர் பக்துன்க்வா முதல்வர் லி அமின் கந்தபூர் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார். அமைதியை சீர்குலைக்கும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!