அதிர்ச்சி... காஸாவில் 8,000 குழந்தைகள் உட்பட 20,000யைக் கடந்தது பலியானோர் எண்ணிக்கை!

 
இஸ்ரேல் காஸா

காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தீவிர தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. அதில் 8,000 குழந்தைகள் மற்றும் 6,200 பெண்கள் அடங்குவர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

காசாவின் ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த போர் 2 மாதங்களை கடந்து நீடித்துவருகிறது. சர்வதேச நாடுகளின் முயற்சியால் காசாவில் 7 நாட்களுக்கு போர் நிறுத்தப்பட்ட நிலையில், அதன் பின்னர் காசா மீதான போரை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.

காசா பெண்கள்

தற்போது தெற்கு காசாவை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மிகவும் ஆக்ரோஷமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. அங்கு இஸ்ரேல் போர் விமானங்கள் இரவு, பகல் பாராமல் குண்டு மழை பொழிந்து வருகின்றன. இந்த சூழலில் தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் போர் விமானம் குண்டு வீசியது. இதில் அந்த குடியிருப்பு தரைமட்டமானது. இந்த சம்பவத்தில் பிறந்து 17 நாட்களே ஆன பெண் குழந்தை, அந்த குழந்தையின் 2 வயது அண்ணன் உள்பட 27 பேர் பலியாகினர். மேலும் அந்த குழந்தைகளின் தாய், தந்தை மற்றும் பாட்டி உள்பட பலரும் படுகாயம் அடைந்தனர். அதுபோல அகதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். இதற்கு முன்னதாக மருத்துவமனைகள் மீதும் இஸ்ரேல் கொடூர தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் உக்கிரமான தாக்குதல்களால் காசாவில் உயிரிழப்பு நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டியுள்ளதாகவும், அதில் 8,000 குழந்தைகள் மற்றும் 6,200 பெண்கள் அடங்குவர் என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலால் உலக நாடுகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன. மேலும், இந்தப் போரை நிறுத்தவும் உலக நாடுகள் தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளன.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web