அதிர்ச்சி... வேலையை விட்டு நிறுத்திட்டாங்க... அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி பெண் தீக்குளிப்பு!

இந்நிலையில் தேனாம்பேட்டையில் உள்ள ( அவுட்சோர்சிங் முறையில்) ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 10 மாதங்களாக ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்தார். ஹவுஸ் கீப்பிங் பணிக்கு ஆண் பணியாளர்கள் தான் தேவைப்படுகிறார்கள். எனவே 7ம் தேதி இன்றுடன் வேலையை விட்டு நின்று விடுங்கள். உங்கள் சம்பளத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் கூறி வேலையை விட்டு நிறுத்தியதாக தெரியவருகிறது. இந்நிலையில் நேற்று மார்ச் 6ம் தேதி அலுவலகத்துக்கு வந்த சுமதி தனது சம்பளத்தை உடனே தருமாறு கேட்டதாக தெரிகிறது.
அவர்கள் இன்று அதாவது மார்ச் 7ம் தேதி வெள்ளிக்கிழமை வரச்சொன்னதாக தெரிகிறது. அந்த நிறுவனத்தை விட்டு வெளியே சென்ற சுமதி சிறிது நேரம் கழித்து மீண்டும் அலுவலகத்துக்குள் வந்தார். கேனில் தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு அலறி துடித்தார். பலத்த தீக்காயம் அடைந்த அவரை, நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உடனடியாக மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
62% தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் எழும்பூர் நீதிமன்ற 14வது நீதிபதி தயாளன், சுமதியிடம் மரண வாக்குமூலம் பெற்றுள்ளார். இந்த தீக்குளிப்பு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் நிறுவனத்தில் பணியாற்றும் HR ( மனிதவள மேலாளர்), சுமதி வேலை செய்வதை அடிக்கடி குறை கூறியபடியே இருந்துள்ளனர். அவர் கூறியதன் பேரிலேயே சுமதியை நீக்கிவிட்டு, ஆண் பணியாளரை ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு நியமிக்க முடிவு செய்தனர். இதனால் மன வேதனை அடைந்த சுமதி விபரீத முடிவு எடுத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அந்த நிறுவனத்தின் பெண் மனித வள அதிகாரியிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!