அதிர்ச்சி.. விற்பனைகாக வைத்திருந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல்!

 
கஞ்சா கடத்தல்
 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா

கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட்  ஜான் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்  குரு வெங்கட்ராஜ் மேற்பார்வையில் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மீகா தலைமையில், சார்பு ஆய்வாளர்  முருகதாஸ் மற்றும் போலீசார் தோட்டிலோவன்பட்டி சோதனை சாவடி அருகே ரோந்து பணியை மேற்கொண்டனர்.

கஞ்சா

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கோயம்புத்தூர் உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஏசுவடியான் மகன் சாமுவேல்ராஜ் (42) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனடியாக மேற்படி போலீசார்  எதிரி சாமுவேல்ராஜை கைது செய்து அவரிடமிருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது