அதிர்ச்சி... தொழிலதிபரிடம் ரூ.15 கோடி மோசடி செய்த டிட்கோ அதிகாரி!

 
சூரிய

கரூரைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.15கோடி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் சென்னை டிட்கோ வருவாய் அலுவலரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து  மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் டிட்கோ வருவாய் அலுவலராக பணியாற்றி வருபவர் சூரிய பிரகாஷ். இவர், கடந்த 2016ல் கரூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்தார். கொரோனா காலத்தில் கரூரில் மருத்துவதுறையை சார்ந்தவர்களுக்கு துணிகள் தயாரிக்கும் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் நல்லமுத்து என்பவரின் அறிமுகம் சூரிய பிரகாஷூக்கு கிடைத்துள்ளது.

லஞ்சம்

அப்போது சூரிய பிரகாஷ், நல்லமுத்துவிடம் வட மாநிலங்களில் நீங்கள் தயாரிக்கும் துணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அசாம் மாநிலம் குவகாத்தியில் உள்ள 3 நிறுவனங்களிடம் ஆர்டர் பெற்று தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதன்படி நல்லமுத்துவை அங்கு அழைத்து சென்றும், அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என அறிமுகம் செய்து வைத்தும், இதற்காக வங்கி கணக்குகள் மூலம் ரூ.15 கோடி வரை பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நல்லமுத்து, பலமுறை சூர்யபிரகாஷுடம் பணத்தை கேட்டும் சூர்யபிரகாஷ்  இதுவரை பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை.

இது தொடர்பாக நல்லமுத்து அளித்த புகாரின்படி கடந்த ஆண்டு கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், மாவட்ட வருவாய் அலுவலர் சூர்ய பிரகாஷ், ஈரோட்டை சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், பெங்களூரை சார்ந்த பூபதி செல்வராஜ் மற்றும் வட மாநிலத்தவர்கள் 3 பேர் என 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கரூர்

இந்நிலையில்சென்னை சென்ற கரூர் குற்றப்பிரிவு போலீசார் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்ய பிரகாஷை கைது செய்து நேற்று கரூர் அழைத்து சென்று தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web