அதிர்ச்சி... சாலை விபத்தில் பேரூராட்சி தலைவர் மகன் மரணம்!

 
செல்வம்

தூத்துக்குடி  மாவட்டம் கோவில்பட்டி அருகே பைக் மீது டிராக்டர் மோதி விபத்திற்குள்ளானதில் விளாத்திகுளம் பேரூராட்சி தலைவரின் மகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் காமராஜ் நகரைச் சேர்ந்த அயன் சூரியராஜ் இவரது இளைய மகன் செல்வம் (28) மற்றும் அவரது நண்பரான விளாத்திகுளம் சாலையர் தெருவை சேர்ந்த குருசாமி மகன் ஸ்ரீராம் (33) ஆகிய இருவரும் கோவில்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று திரையரங்கில் திரைப்படம் பார்த்து முடித்து விட்டு ஊர் திரும்பி‌ உள்ளனர்.

பள்ளி மானவி தற்கொலை

அப்போது கோவில்பட்டி - எட்டையாபுரம் சாலையில் இவர்களுக்கு முன்பாக சென்று கொண்டிருந்த டிராக்டர் ஒன்று, பங்க்கில் டீசல் போடுவதற்காக திடீரென திரும்பிய போது டிரைலரில் இன்டிக் கேட்டர் ஏதும் இல்லாததால் டிராக்டரின் ட்ரெய்லர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் ஸ்ரீராம் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து

மேலும் தகவல் அறிந்து விரைந்து வந்த கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு செல்வத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் இதுகுறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குpபதிவு செய்து விபத்துக் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web