அதிர்ச்சி...விழுப்புரத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து!

 
விழுப்புரம்


விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து 7 பெட்டிகளுடன் பயணிகளை ஏற்றிக் கொண்டு புதுச்சேரி நோக்கி புறப்பட்ட பயணிகள் ரயில் சில அடி தூரம் சென்றதுமே திடீரென தண்டவாளத்தில் இருந்து ரயிலில் இருந்த ஒரு பெட்டியின் சக்கரங்கள் கீழே இறங்கியதில் தடம் புரண்டது.

புதுச்சேரி நோக்கி புறப்பட்ட மெமு ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. உடனடியாக ஒரு பெட்டியின் சக்கரம் தண்டவாளத்தில் இருந்து இறங்கியதை லோகோ பைலட் கவனித்து, விரைந்து செயல்பட்டு ரயிலை உடனடியாக நிறுத்தியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

விழுப்புரம்

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் சீரமைக்கப்பட்டது. ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டு வேறு வாகனங்களில் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணை முழுவதுமாக முடிந்த பின்னரே ரயில் பெட்டி தடம் புரண்டதற்கான காரணம் தெரியவரும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

விழுப்புரம்

இன்று அதிகாலை 5.25 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்ட விழுப்புரம்-புதுச்சேரி ரயில் சிறிது நேரத்திலேயே ஒரு வளைவுப் பகுதியைக் கடந்து செல்லும் போது ​​ஒரு பெட்டி தடம் புரண்டது. ரயில் தடம் புரண்டதால் விழுப்புரம் பாதையில் காலை 8.30 மணி வரை ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web