அதிர்ச்சி... தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரயில் மோதி பலி!

 
ரயில் தண்டவாளம்

திருவள்ளூர் மாவட்டத்தில், இரு வேறு சம்பவங்களில் தண்டவாளத்தை கடக்க முயன்றதில் 2 பேர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். 

திருவள்ளூர் அடுத்த புட்லூர்- செவ்வாப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தண்டவாளம்

அதே போல திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றதில், ரயில் மோதி சம்பவ இடத்திலேயே  இன்னொருவர் உயிரிழந்தார்.

ரயில்

ரயில் மோதி இறந்த நபர்கள் யார்? யார்? என தெரியவில்லை. உயிரிழந்தவர்களின் உடல்களை திருவள்ளூர் ரயில்வே இருப்பு பாதை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, அவர்களது விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?