ஷாக் வீடியோ... ஏர் இந்தியா விமான விபத்தில் சிக்கிய குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி?

இன்று ஜூன் 12ம் தேதி பிற்பகலில் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில், குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி விமானத்தில் பயணித்ததாக டிவி9 குஜராத்தி அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளியாகவில்லை. சமூக வலைத்தளங்களில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான அகமதாபாத் விமானத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இருந்ததை ஏர் இந்தியா டிக்கெட் உறுதிப்படுத்தியுள்ளன.
🚨 BREAKING: Unconfirmed reports suggest former Gujarat CM Vijay Rupani may have been on board the Air India flight that crashed near Meghani, shortly after takeoff from Ahmedabad Airport.
— Prashant (@prashant10gaur) June 12, 2025
⚠️ Authorities have not confirmed his presence yet. https://t.co/gd6evgfEyj pic.twitter.com/PodNNJhySj
விபத்துக்குள்ளான விமானம் சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு பிற்பகல் 1:10 மணிக்கு திட்டமிடப்பட்டு, 1:38 மணிக்கு புறப்பட்டு, இரண்டு நிமிடங்களில், அதாவது 1:40 மணிக்கு மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா கேம்ப் மற்றும் ஐ.ஜி.பி. காம்பவுண்ட் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து ஏற்பட்டது.
விபத்துக்குள்ளான இந்த விமானம் ஒரு போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஆகும். இந்த விமானத்தில் 242 பயணிகள், உட்பட 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் இருந்ததாக மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் இன்னும் எத்தனை பேர் உயிரிழந்தனர்… எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை. விரைவில் முழு தகவல்களை தெரிவிப்போம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!