அதிர்ச்சி... பயணித்த அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பெண்மணி உயிரிழப்பு!

 
அரசு பேருந்து

மதுரை மாவட்டத்தில் தான் பயணித்த அரசு பேருந்தின் சக்கரத்திலேயே சிக்கி பெண்மணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம், கழுகர்கடை பகுதியில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் நோக்கி, மகளிருக்கான அரசு நகர பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. இந்த பேருந்து தெப்பக்குளம் நிறுத்ததில் நின்றபோது, பெண்மணி ஒருவர் பேருந்தில் ஏறினார். கீழவாசல் பேருந்து நிறுத்தத்தில் அவர் கீழே இறங்கினார். கீழே இறங்கிய அடுத்த சில வினாடிகளில் பேருந்தின் முன்பகுதியில் சாலையை கடக்க முயன்றார்.

பேருந்து

இவர் பேருந்தின் முன்னால் சாலையைக் கடக்க முயற்சித்ததைக் கவனிக்காமல் அலட்சியமாக பேருந்தை இயக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் கணேசன் பெண்மணி மீது மோதினார். இதில் முன்பக்க சக்கரத்தில் சிக்கிய பெண்மணி,  தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார், அவரின் சடலத்தைக் கைப்பற்றி, மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web