அதிர்ச்சி... பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில், பழைய பேருந்து நிலையத்தில் பெண் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை உள்ளது.
தூத்துக்குடி தாளமுத்து நகர், ஆ. சண்முகபுரத்தை சேர்ந்தவர் முக்கையா மனைவி ராஜம்மாள் (65), இவர் அரசரடியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அதே கம்பெனியில் பணி புரியும் ஒரு பெண்ணுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.

இந்த குழந்தையை பார்ப்பதற்காக ராக்கம்மாள் இன்று மதியம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் அவர் தாளமுத்து நகர் செல்வதற்காக மருத்துவமனையில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு நடந்து வந்தார். பஸ் நிலையத்துக்குள் வந்ததும் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸில் வந்த டாக்டர் அவரை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். ராக்கம்மாள் மாரடைப்பாய் இருந்தாரா அல்லது கடும் வெயில் தாக்கத்தால் இறந்தாரா என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் சக பயணிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரணை நடத்தி வருகிறார்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
