அதிர்ச்சி... கணவரை தீ வைத்து கொலை செய்த மனைவி!

தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அட்டி பகுதியில் வசித்து வருபவர் முரளி. இவர், அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி விமலாராணி வேறு ஒரு ஆண் நண்பருடன் பழகி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த கணவர் முரளி அவரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இருவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபத்தில் விமலாராணி, முரளி மீது தீ வைத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து உயிரிழந்த முரளி அளித்த வாக்குமூலத்தில் உண்மை தெரியவந்ததை அடுத்து இது குறித்து மனைவி விமலாராணியை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!