அதிர்ச்சி... காவல் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. போலீஸ்காரர் வெறித்தனம்!

 
பாலியல் பலாத்காரம் சிறுமி

மராட்டிய மாநிலத் தலைநகர் மும்பையை அடுத்த பால்கர் மாவட்டத்தில் உள்ள காசா போலீஸ் நிலையத்திலேயே ஒரு பெண், காவல் நிலையப் பொறுப்பாளராக இருந்த போலீஸ்காரரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஒரு வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக 40 வயதுப் பெண் ஒருவர் காசா காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த போலீஸ்காரர் அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி, சபலமடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் அந்தப் பெண்ணை காவல் நிலைய வளாகத்திலேயே இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்று மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சிறுமிக்கு பாலியல் சீண்டல்

மேலும் இந்தச் சம்பவம் குறித்து யாரிடமாவது தெரிவித்தாலோ அல்லது புகார் அளித்தாலோ, பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவதாக மிரட்டி அந்தப் பெண்ணை அனுப்பி வைத்துள்ளார். போலீஸ்காரரின் மிரட்டலால் பாதிக்கப்பட்டபோதும், அந்தப் பெண் துணிச்சலுடன் மீண்டும் காசா காவல் நிலையம் சென்று, அங்கிருந்த சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, போலீசார் அந்தப் பெண்னைப் பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தவும் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பாலியல்

"வேலியே பயிரை மேய்ந்த கதை"யாக, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீஸ்காரரே, காவல் நிலையத்திலேயே வைத்துப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த இந்தச் சம்பவம் மராட்டியத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!