அதிர்ச்சி... அரசுப் பேருந்தில் இளம்பெண்ணுக்கு நடத்துனர் பாலியல் தொல்லை!
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே அரசுப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு நள்ளிரவில் பாலியல் தொல்லை அளித்த நடத்துநரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவையில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பேருந்து ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. இதில் நடத்துநராக கோவையைச் சேர்ந்த மகாலிங்கம் (43) பணியில் இருந்தாராம். பேருந்தில் தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 25 வயது பெண் பயணம் செய்துள்ளார். நள்ளிரவு நேரத்தில் அந்தப் பெண்ணிடம், நடத்துநர் பாலியல் தொந்தரவு செய்து அதிர்ச்சியளித்துள்ளார்.

இது குறித்து அந்தப் பெண் தனது உறவினர்களுக்கு தகவல் அளித்த நிலையில், பேருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு அதிகாலை வந்த போது, பெண்ணின் உறவினர்கள் சேர்ந்து நடத்துநர் மகாலிங்கத்தைப் பிடித்து புதிய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மகாலிங்கத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
