அடப்பாவமே!! இளைஞரின் வயிற்றுக்குள் 56 பிளேடுகள்!! மருத்துவர்கள் அதிர்ச்சி!!

 
யஷ்பால் சிங்

ராஜஸ்தான் மாநிலம் டட்டா பகுதியை சேர்ந்த யஷ்பால் சிங் (26) என்ற இளைஞர் பாலாஜி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ரத்த வாந்தி எடுத்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இளைஞர் யஷ்பால் சிங் பிளாஸ்டிக் கவருடன் மூன்று பாக்கெட்டு பிளேடுகளை விழுங்கியுள்ளார். இந்த நிலையில் வயிற்றுக்குள் சென்றதும் பிளேடுகளைச் சுற்றியிருந்த பிளாஸ்டிக் கவர் கரைந்து கடுமையான வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு உட்புற இரத்தப்போக்கு ஏற்பட்டது தெரியவந்தது.

யஷ்பால் சிங்

பின்னர் அங்கு அவருக்கு சோனோகிராபி எடுத்து பார்த்ததில் அவரது உடலில் பிளேடுகள் இருக்கும் பகுதி, நிலை குறித்து கண்டறிந்தனர். இதையடுத்து மருத்துவர்கள் எண்டோஸ்கோபி செய்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். அதன்படி 7 பேர் கொண்ட மருத்துவ குழு அறுவை சிகிச்சை செய்து 3 மணி நேரத்தில் வயிற்றில் இருந்த அனைத்து பிளேடுகளையும் அகற்றினர்.

யஷ்பால் சிங்

தற்போது இளைஞர் யஷ்பால் சிங் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். அதேநேரம் அவர் பிளேடு விழுங்கியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web