கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் மாரடைப்பால் மரணம்! அதிர்ச்சியில் நண்பர்கள்!

 
கபடி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரில் 2 நாட்களாக கபடி போட்டி நடைபெற்று வந்தது. இதில் திண்டுக்கல் மாவட்டம் பாளையம் அருகே காச்சக்காரன்பட்டியை சேர்ந்த மாணிக்கம் என்ற 26 வயது இளைஞர் தனது அணியுடன் போட்டியில் பங்கேற்றார்.

மாணிக்கத்தின் அணி நேற்று இரவு 2 சுற்று போட்டிகளில் வெற்றி பெற்று 3வது சுற்று போட்டியில் விளையாட இருந்தது. இதற்காக வீரர்கள் ஓய்வில் இருந்தனர். அப்போது மாணிக்கம் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

கபடி

அங்கு முதல்நிலை சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவர்கள் அறிவுறுத்தியத்தின் பேரில் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணிக்கம் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

கபடி

மேலும் ஏற்கனவே இருதய பாதிப்பு இருந்து அதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும், அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web