அமமுகவில் அதிரடி… மாணிக்க ராஜா கட்சியிலிருந்து நீக்கம்!

 
அமுமுக

அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மாணிக்க ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். அமமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன்

கழகத்தின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதுடன், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் மாணிக்க ராஜா இன்று முதல் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கட்சி அறிவுறுத்தியுள்ளது.

தீயசக்தி திமுகவை வீழ்த்த, அனைத்து கட்சிகளும் ஒரே கூட்டணியில் பயணிக்க வேண்டும்... டிடிவி தினகரன்!  

இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணிக்க ராஜா, திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில அமமுக மாவட்டச் செயலாளர்களும் திமுகவில் இணைவார்கள் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!