பெரும் அதிர்ச்சி... வயலில் பதுக்கப்பட்ட 10,000 கிலோ வெடிமருந்து பறிமுதல்!

 
வெடிமருந்து வெடிமருந்து

குடியரசு தின பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய மற்றும் மாநில உளவுத்துறையினரின் ரகசியத் தகவலின் அடிப்படையில் மிகப்பெரிய வேட்டை நடத்தப்பட்டுள்ளது.

அதில், ராஜஸ்தான் மாநிலம் நாகவூர் மாவட்டம், ஹர்சவூர் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தின் வயல் பகுதியில் சோதனை நடத்திய போலீசார், 187 சாக்கு மூட்டைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 10,000 கிலோ அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தைக் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர். இந்த வெடிமருந்துகளைப் பதுக்கி வைத்திருந்த சுலைமான் கான் என்ற நபரை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.

கேரளாவில் 2 பெண்களை கைது செய்தது என்.ஐ.ஏ.

பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் மிகவும் சக்தி வாய்ந்த வெடிமருந்தாகும். இது பொதுவாகப் பாறைகளைத் தகர்க்கப் பயன்படுத்தப்பட்டாலும், சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. குடியரசு தினக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ள சூழலில், இது ஏதேனும் சதித்திட்டத்திற்காகப் பதுக்கப்பட்டதா அல்லது சட்டவிரோத சுரங்கத் தொழிலுக்குக் கொண்டு வரப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட வெடிமருந்தின் அளவு மிகப்பெரியது என்பதால், தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் மத்திய உளவுத்துறை (IB) அதிகாரிகள் நாகவூர் மாவட்டத்திற்கு விரைந்துள்ளனர். இது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதா என அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

என்.ஐ.ஏ

கடந்த காலங்களில் இந்தியாவில் நடந்த பல குண்டுவெடிப்புச் சம்பவங்களில் (எடுத்துக்காட்டாக 2011 மும்பை குண்டுவெடிப்பு) அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைக் கையாளுவதற்கு முறையான உரிமம் மற்றும் பாதுகாப்பு விதிகள் அவசியம். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ராஜஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற முக்கிய நகரங்களில் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!