அதிர்ச்சி.. 14 வயது சிறுமி 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை.. 3 பேர் கைது!
கான்பூர் சச்சேந்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக தற்போது முக்கியக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
7-ம் வகுப்பு வரை படித்துவிட்டுப் படிப்பை பாதியில் நிறுத்திய 14 வயது சிறுமி ஒருவர், கடந்த ஜனவரி மாதம் கடத்திச் செல்லப்பட்டார். ஒரு மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் கடத்தப்பட்ட அந்தச் சிறுமி, ரயில் தண்டவாளம் அருகே உள்ள ஒரு பாழடைந்த இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, சுமார் இரண்டு மணி நேரம் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பின்னர் அந்தச் சிறுமியை மயக்க நிலையிலேயே அவரது வீட்டிற்கு அருகே வீசிவிட்டுச் சென்றனர்.

சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்: இந்த வழக்கில் தொடர்புடைய சிவ்பரன் யாதவ் என்ற உள்ளூர் யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபரீதச் செயலில் பிதூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் அமித் குமார் மௌரியா என்பவருக்குத் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ கார் இவருடையது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். குற்றவாளிகள் தப்பிக்க உதவியதாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் இந்த வழக்கில் இதுவரை 3 பேர் பிடிபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளிக்கச் சென்றபோது, உள்ளூர் போலீசார் முறையாகப் புகாரைப் பெறாமல் உண்மையை மறைக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கடமை தவறியதற்காகவும், போக்சோ சட்டத்தின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்யத் தவறியதற்காகவும் சச்சேந்தி காவல் நிலைய ஆய்வாளர் விக்ரம் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் (DCP) தினேஷ் சந்திர திரிபாதியும் அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார்.

தற்போது இந்தக் கூடுதல் டிசிபி கபில் தேவ் சிங் தலைமையிலான குழுவினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள சப்-இன்ஸ்பெக்டரைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முறையான மருத்துவச் சிகிச்சைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
