அதிர்ச்சி... பைக்கில் இருந்த பாம்பு கடித்து இளைஞர் உயிரிழப்பு!
Apr 5, 2025, 15:30 IST

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (22). எலக்ட்ரீஷியனான இவர் நேற்று தனது நண்பர் ராம்குமாருடன் சுருளிப்பட்டி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, பைக்கின் முகப்பு விளக்குப் பகுதியில் இருந்து பாம்பு மேலே ஏறி வந்துள்ளது. பாம்பைப் பார்த்ததும் வண்டியை ஓரமாக நிறுத்துவதற்குள் பாம்பு அவரை கடித்துள்ளது.
உடனடியாக கம்பம் அரசு மருத்துவமனைக்குக அவரைக் கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web