அதிர்ச்சி... வந்தே பாரத் ரயில் முன் பாய்ந்த ஆட்டோ... குடிபோதையில் ஓட்டுநர் செய்த விபரீதம்

 
ரயில் விபத்து

கேரள மாநிலம் வர்க்கலா அருகே தண்டவாளத்தில் நின்றிருந்த ஆட்டோ மீது வந்தே பாரத் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கவனக்குறைவால் நேர்ந்த இந்த விபத்தால் ரயில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

நேற்றிரவு காசர்கோட்டிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்தே பாரத் ரயில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. வர்க்கலா ரயில் நிலையம் அருகே வந்தபோது, தண்டவாளத்தின் குறுக்கே ஆட்டோ ஒன்று நின்றுக் கொண்டிருப்பதைக் கண்டு லோகோ பைலட் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவசர கால பிரேக்கை அவர் பயன்படுத்தினார். இருப்பினும் அதிவேகமாக வந்த ரயில் தண்டவாளத்தில் நின்ற ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த மோதலில் ஆட்டோ சுக்குநூறாக நொறுங்கியது.

வந்தே பாரத்

இந்த விபத்தின் போது ஆட்டோவிற்குள் இருந்த ஓட்டுநர் சிபி (28), ரயில் மோதிய வேகத்தில் வெளியே தூக்கி வீசப்பட்டார். இதில் லேசான காயமடைந்த அவர், பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்த தகவலறிந்து வந்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) போலீசார், தேடுதல் வேட்டை நடத்தி சிபியை கைது செய்தனர்.

ரயில்வே போலீசாரின் விசாரணையில் அவர் அதிகப்படியான குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஆட்டோவை நிறுத்தியிருந்த அவர், போதை தலைக்கேறிய நிலையில் தவறுதலாகத் தண்டவாளப் பகுதிக்குள் ஆட்டோவை ஓட்டிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வந்தே பாரத்

ரயிலின் முன்பக்கப் பகுதியில் ஆட்டோவின் இரும்பு பாகங்கள் சிக்கிக் கொண்டதால், ரயிலை உடனடியாக இயக்க முடியவில்லை. தீயணைப்புத் துறையினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி ஆட்டோவின் பாகங்களை அகற்றினர். இதன் பின்னரே வந்தே பாரத் ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

குடிபோதையில் ரயிலை கவிழ்க்கும் வகையில் செயல்பட்டதாக ஓட்டுநர் சிபி மீது கடுமையான பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக ரயிலில் இருந்த பயணிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!