பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் கார் மோதி தூக்கி வீசப்பட்டதில் பரிதாப பலி!

 
பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் கார் மோதி தூக்கி வீசப்பட்டதில் பரிதாப பலி! 

இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் குருகிராம் பகுதியில் நடைபெற்ற ஒரு சாலை விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதன்படி மார்ச் 14ம் தேதி 19 வயது ஜடின் என்ற பி. டெக் மாணவர் சபிடான் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஜடீனின் பைக் மீது வேகமாக மோதியது.

இந்த பயங்கர விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஜடின் படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் வேகமாக ஓடிவந்து படுகாயம் அடைந்த ஜடினை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இந்த விபத்து குறித்து காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தப்பி சென்ற நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகியிருந்த நிலையில் தற்போது அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

 

From around the web