அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ் வேட்பாளர்... வாக்குப்பதிவுக்கு முன் தேர்தலில் இருந்து விலகல்!

 
அஸ்ஸாம் அஸ்ஸாம்

புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுடன் இணைந்து அசாமிலும் இன்று (ஏப். 09) சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 126 தொகுதிகளைக் கொண்ட அசாமில், காலையிலிருந்தே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வரும் நிலையில், உதல்குரி (ST) தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுரேன் தைமரி, தேர்தல் தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாகத் தான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து கட்சித் தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தனது விலகல் குறித்து உருக்கமாகப் பேசிய சுரேன் தைமரி, காங்கிரஸ் கட்சித் தலைமை தனக்குத் தேர்தல் பிரசாரத்திற்காகவோ அல்லது களப்பணிகளுக்கோ எந்தவிதமான நிதியுதவியையும், ஒத்துழைப்பையும் வழங்கவில்லை என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். "கட்சி என்னை நட்டாற்றில் விட்டுவிட்டது; யாரும் எனக்கு வாக்களிக்க வேண்டாம்" என்று அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு ஏற்கனவே முடிந்துவிட்டதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) அவரது பெயரும் சின்னமும் அப்படியே இருக்கும் எனத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அசாமில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், ஒரு முக்கிய வேட்பாளர் கடைசி நேரத்தில் இவ்வாறு அறிவித்திருப்பது காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம், உதல்குரி தொகுதியில் பிபிஎஃப் (BPF) மற்றும் யூபிபிஎல் (UPPL) வேட்பாளர்களிடையே தற்போது நேரடிப் போட்டி நிலவுகிறது. மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி அசாமில் கணிசமான வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!