அதிர்ச்சி... இளம்பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய போலீஸ்காரர்!
பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரியே, ஒரு பெண்ணுக்குத் தொல்லை கொடுத்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டம் கோட்வாலி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வந்தவர் பங்கஜ் பதக். இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் செல்போன் எண்ணிற்குத் தொடர்ந்து ஆபாசமான குறுஞ்செய்திகள் (Messages) மற்றும் முகம் சுளிக்க வைக்கும் ஆபாசப் புகைப்படங்களை அனுப்பி வந்துள்ளார்.

ஒரு காவலரே இதுபோன்ற தரக்குறைவான செயலில் ஈடுபடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், இது குறித்துத் தைரியமாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்தார். புகாரை ஆய்வு செய்த எஸ்.பி., ஆரம்பக்கட்ட விசாரணையிலேயே கான்ஸ்டபிள் பங்கஜ் பதக் தவறு செய்திருப்பதை உறுதி செய்தார். சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய ஒரு காவலரே பெண்ணின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதை அவர் வன்மையாகக் கண்டித்தார்.

இதனைத் தொடர்ந்து, பங்கஜ் பதக்கை உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspend) செய்து மாவட்ட எஸ்.பி. அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு மட்டுமின்றி, கிரிமினல் வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி, தற்போது பங்கஜ் பதக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
